Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 1 April 2025
webdunia

சென்னை டிடிகே சாலையில் உள்ள ’துளசி மெட்ராஸ் ஸ்டோரை’ திருமதி. செல்வி செல்வம் மற்றும் பல பிரபலங்கள் திறந்து வைத்தனர்!

Advertiesment
Tulsi Madras Store

J.Durai

, செவ்வாய், 8 அக்டோபர் 2024 (09:05 IST)
சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான திருமதி. செல்வி செல்வம், திருமதி. துர்கா ஸ்டாலின், திருமதி. ஜெயந்தி தங்கபாலு, டாக்டர். எழிலரசி ஜோதிமணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  இவர்களோடு நிகழ்வில் டாக்டர். மரியா ஜீனா ஜான்சன், நீனா ரெட்டி, உஷா வணங்காமுடி, தேவி கோயல், ப்ரீதா ஹரி மற்றும் அனிதா விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
கடந்த 2020 ஆம் ஆண்டு 'துளசி மெட்ராஸ்' என்ற பிராண்ட் ரஸ்வரிதி, சந்தீப் பரேக் மற்றும் பிரார்த்தனா பரேக் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்திய நெசவு மற்றும் கைவினை கலைஞர்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், அவர்கள் இந்த பிராண்டை ஆன்லைனில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களின் தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், இந்த பிராண்ட் படிப்படியாக வளர்ந்து காஞ்சிபுரத்தில் இருந்து மற்ற நெசவு வகைகளுக்கு தங்கள் சேவையை விரிவுபடுத்தியது. இதன் முதல் கடை பி.எஸ்.சிவசாமி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. 
 
துளசி மெட்ராஸ் பல நெசவு வகைகளையும் கலை வடிவங்களையும் ஆராய்ந்து, நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களுடன் ஒத்துழைத்து, நமது பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் புதுமையான ஃப்யூஷன் புடவைகளை உருவாக்கியது. பிரீமியம் சல்வார்களுடன் டுசார்ஸ், கட்வால்ஸ் மற்றும் பனாரசிஸ் போன்றவைகளுடன் விரிவடைந்தது.
 
இந்த பிராண்டின் லோகோ காமதேனு செழுமையின் தெய்வம்.
 
இதைப்போலவே, நுகர்வோரின் எப்போதும் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனைத்து விலை வரம்புகளிலும் உயர்தர தயாரிப்புகளை வழங்குவதே அவர்களின் குறிக்கோளாக உள்ளது. இந்த பிராண்ட் தனது வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுவதும் உள்ள கைவினைஞர்களால் வடிவமைக்கப்பட்ட சிறந்த புடவைகளைக் கொடுக்கிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்சியில இருக்கதுனா இருங்க.. இல்லைனா கெளம்புங்க! - சீமான் பேச்சால் அப்செட் ஆன நிர்வாகி எடுத்த முடிவு!