Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூபாய் இறங்கல.. டாலர்தான் ஒய்யாரம் காட்டுது!? – எம்.பி சு.வெங்கடேசன் கலாய்!

Su Vengadesan
, திங்கள், 17 அக்டோபர் 2022 (09:31 IST)
இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் எம்.பி சு.வெங்கடேசன் இதுகுறித்து ட்விட்டரில் பகடி செய்து பதிவிட்டுள்ளார்.

கடந்த சில காலமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் சரிவை கண்டு வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82க்கும் கீழ் சரிந்துள்ளது.

இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்கப்பட்டபோது அவர் “இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்திருப்பதாக நான் கருதவில்லை. டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதாகவே நான் பார்க்கிறேன்” என கூறியுள்ளார். அவரது இந்த பேச்சை எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

webdunia

இந்நிலையில் இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் “நாங்கள் விழவில்லை பள்ளத்துக்குள் இருக்கிறோம். நாங்கள் பட்டினியாக இல்லை சாப்பிடாமல் இருக்கிறோம். விலை ஏறவில்லை நாங்கள் அதிகமாக கொடுத்து வாங்குகிறோம். ரூபாய் இறங்கவில்லை டாலர்தான் ஏறி ஒய்யாரம் காட்டுகிறது. இவ்வளவையும் புரிந்து கொண்டால் நீங்கள் இந்திய பொருளாதாரத்தின் புலி” என்று பதிவிட்டுள்ளார்.

அதேசமயம் நிர்மலா சீதாராமனுக்கு ஆதரவாக பேசி வரும் பலர் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்பது அவற்றின் பரிமாற்றத்தை பொருத்து அமைவதாகவும், மற்ற நாணய மதிப்புகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாய் மதிப்பு உயர்வடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.

Edited By: Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்ம அப்படியா பழகிருக்கோம்.. இப்படி தப்பா சொல்றீங்களே! – அமெரிக்கா மீது பாக். வருத்தம்!