ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 78 வயதான கமர்நிஷா என்பவர் காவல் நிலையத்தில் தன் பிள்ளைகள் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். தான் உயிரோடு இருக்கும் போதே இறந்துவிட்டதாக போலி ஆவணம் தயாரித்த பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.
கமர்நிஷா ராமநாதபுரம், வாணி கிராமத்தை சேர்ந்தவர். இவர் மலேசியாவில் வேலை பார்த்துள்ளார். இவர் சம்பாதித்த பணத்தையும், ஊரில் இருந்த கணவர் அப்துல்ஜாப்பார் சேர்த்த பணத்தையும் வைத்து தனது பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து வைத்துள்ளனர்.
தன்னுடைய கணவர் இறந்து விட்ட நிலையில், பல லட்சம் மதிப்புள்ள அந்த சொத்தை அபகரிக்க தன்னுடைய 7 பிள்ளைகளில் 5 பேர் கூட்டுச்சதி செய்து தானும் இறந்து விட்டதாக போலி ஆவணம் தயாரித்ததாக கமர்நிஷா தனது புகாரில் கூறியுள்ளார். தான் இறந்துவிட்டதாக ஆவணம் தயாரித்த பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.