Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனாவுக்கு பலியான 4 மகன்கள்: அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு

Advertiesment
கொரோனாவுக்கு பலியான 4 மகன்கள்: அதிர்ச்சியில் தாய் உயிரிழப்பு
, வெள்ளி, 28 மே 2021 (10:02 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தன்னுடைய நான்கு மகன்கள் பலியான தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
திருப்பூர் மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் என்ற பகுதியில் 70 வயது மூதாட்டி பாப்பாம்மாள் எனப்வர் உடல் நலமில்லாமல் இருந்தார். அவருக்கு நான்கு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் 
 
உடல்நலமின்றி இருக்கும் தாய்க்கு நான்கு மகன்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மகன் வந்து சாப்பாடு கொடுத்து விட்டு செல்வார்கள். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தனது மகன்கள் சாப்பாடு கொடுக்க வரவில்லை என்ற வருத்தத்தில் அந்த மூதாட்டி இருந்தார். அது பற்றி அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது நான்கு மகன்களும் அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தார்கள் என்று கூறியுள்ளனர் 
 
இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த பாப்பாம்மாள் இறந்துவிட்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ளவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 2 லட்சத்திற்கு கீழ் குறைந்த தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா!