Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விபத்தில் தாய் மற்றும் குழந்தை தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலி

Advertiesment
விபத்தில் தாய் மற்றும் குழந்தை தலை நசுங்கி சம்பவ இடத்திலே பலி
, வியாழன், 26 ஏப்ரல் 2018 (11:18 IST)
கணவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற மனைவி மற்றும் குழந்தை விபத்தில் சிக்கி பரிதாபமாக் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர் கணேசமூர்த்தி(35).இவரது மனைவி ஜான்சி(28). இவர்களுக்கு பிரின்சிகா(7), கனியா(5), ஹரினி(3) ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
 
இந்நிலையில் கணேசமூர்த்தி, ஜான்சி மற்றும் மகள் ஹரினி ஆகியோர் உறவினரின் காதணி விழவிற்கு சென்று இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் இரு சக்கர வாகனத்திற்கு பின்னால் வந்த அரசுப்பேருந்து மோதியதில் ஜான்சி மற்றும் ஹரினி ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் பேருந்தின் சக்கரம் ஏறி தாய் மற்றும் குழந்தை தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக் உயிரிழந்தனர்.
webdunia
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா சிறை செல்ல தினகரனே காரணம்: திவாகரன் தாக்கு!