சென்னை விமான நிலைய கழிவறையில் கிலோ கணக்கில் தங்கம்.. சுங்க இலாகா அதிகாரிகள் அதிர்ச்சி..!

Mahendran
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (13:10 IST)
சென்னை விமான நிலைய கழிவறைவில் கிலோ கணக்கில் தங்கம் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சுங்க இலாக அதிகாரிகள் அதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சென்னை விமான நிலையத்தில் அவ்வப்போது வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்படும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது என்பதும் இது குறித்த கைது நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம், 
 
இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் 85 லட்சம் மதிப்புள்ளான  1.25 கிலோ தங்க கட்டிகள் இருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் வெளியானது. இதனை எடுத்து உடனடியாக அங்கு சென்ற அதிகாரிகள் தங்க கட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை செய்து வருகின்றனர். 
 
தங்க கட்டிகளை கடத்தி வந்த மர்ம நபர்கள் சுங்கத்துறை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக கழிவறையில் போட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கழிவறைக்கு வந்தது யார்? திரும்பி சென்றது யார் ?என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்குரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம்; சதியை முறியடிப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி!

'ரஃபேல்' விமானத்தில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம்: பாகிஸ்தானின் பொய் பிரச்சாரம் முறியடிப்பு!

X.com டொமைன் மாற்றம்: நவம்பர் 10 முதல் twitter.com செயல்படாது.. லாகின் செய்ய 2FA தேவை..!

மருத்துவ சிகிச்சைக்காக சாமியார் அசராமுக்கு 6 மாத இடைக்கால ஜாமீன்! நீதிமன்றம் உத்தரவு..!

தாவூத் இப்ராகிமின் முக்கிய கூட்டாளி கோவாவில் கைது! போதைப்பொருள் ஆலை நடத்தியவரா?

அடுத்த கட்டுரையில்
Show comments