Webdunia - Bharat's app for daily news and videos

Install App

55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணையின் நீர்மட்டம்.. வெளியே தெரியும் புராதன சின்னங்கள்

Mahendran
வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:56 IST)
மழைக்காலத்தில் முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை தற்போது கோடை காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நீர்மட்டம் குறைந்து 55 அடிக்கும் கீழே சென்றுள்ளதாகவும் அணையின் நீர்த்தேக்க பகுதியில் புராதன சின்னங்கள் வெளியே தரும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களிலும் மிக வேகமாக நீரின் அளவு குறைந்து வருவதாக கவலை தரும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. 
 
இதனால் பெங்களூரில் ஏற்பட்ட தண்ணீர் கஷ்டம் தமிழகத்திற்கு ஏற்படுமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடிக்கும் கீழே குறைந்துள்ளது. இதன் காரணமாக அணையின் உள்ளே உள்ள புராதன சின்னங்கள் வெளியே தெரியும் அளவுக்கு உள்ளன. குறிப்பாக நாகமரை பரிசல் துறை பகுதியில் நந்தி சிலை மற்றும் கிறிஸ்தவ தேவாலய கோபுரம் ஆகியவை வெளியே தெரிகின்றன. 
 
ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55 அடிக்கும் குறைந்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி நீர்த்தேக்கப்பகுதி ஆங்காங்கே வெடித்த நிலையில் காணப்படுவதாக  கூறப்படுகிறது. 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

ஒடிஸா வளங்களை கொள்ளையடிக்கும் தமிழகத்தை சோ்ந்தவா்கள்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு..!

தொடர் மழையால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளம்.. தடுப்பணையை தாண்டி வரும் தண்ணீர்..!

அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!

திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு

பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பு..! மூளைச்சலவை செய்த 6 பேர் கைது..!!

அடுத்த கட்டுரையில்
Show comments