Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை பார்க்கலாம்.. மதபோதகரை நம்பிய 400 பேர் பரிதாப பலி..!

Advertiesment
உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை பார்க்கலாம்.. மதபோதகரை நம்பிய 400 பேர் பரிதாப பலி..!
, செவ்வாய், 18 ஜூலை 2023 (14:40 IST)
உண்ணாவிரதம் இருந்தால் இயேசுவை பார்க்கலாம் என்று மத போதகர் ஒருவர் கூறியதை அடுத்து உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் 400க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியான சம்பவம் கென்யா நாட்டில் நடந்துள்ளது. 
 
கென்யா நாட்டில் உள்ள மாலண்டி என்ற கடற்கரை நகரத்தில் தேவாலயம் ஒன்று கடந்த சில ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்குள்ள மத போதகர் பால் மெக்கன்சி என்பவர் உண்ணாவிரதம் இருந்து பிரார்த்தனை செய்தால் இயேசுவை சந்திக்கலாம் என்று கூறியுள்ளார். 
 
இதை நம்பி பலர் உண்ணாவிரதம் இருந்த நிலையில் உண்ணாவிரதம் இருந்த பொதுமக்கள் அடுக்கடுக்காக உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்தக்கு சென்று உண்ணாவிரதம் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
மேலும் மதபோதகரை நம்பி பலியானவர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போதகர் மெக்கன்ஸி அவரது மனைவி உள்பட 16 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர் .
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண டிரைவர் ஆக இருந்த மெக்கன்ஸி மத போதகராக மாறி 400க்கும் மேற்பட்டவர்கள் மரணத்திற்கு காரணமாக இருப்பது கென்யாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குரும்பர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும்: முதல்வருக்கு அன்புமணி கடிதம்..!