பள்ளி பேருந்துகளை எரிக்க பயன்படுத்தப்பட்ட சாராய பாக்கெட்டுக்கள்: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 20 ஜூலை 2022 (11:46 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்ததை அடுத்து பொதுமக்கள் நடத்திய ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது என்பதும், இதனை அடுத்து பேருந்துகள் வரிசையாக தீ வைக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் பள்ளி பேருந்துகளை எரிக்க போராட்டக்காரர்கள் சாராய பாக்கெட்டுகளை பயன்படுத்தியதாக தற்போது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
சாராய பாக்கெட்டுகள் போராட்டக்காரர்களுக்கு எப்படி கிடைத்தது என போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். சாராய பாக்கெட்டுகளை பேருந்துகளை எரிக்க பயன்படுத்தியுள்ளனர் என்றால் இந்த போராட்டத்தை நடத்தியவர்கள் உண்மையான போராட்டக்காரர்கள் இல்லை என்றும் வேண்டும் என்றே கலவரம் தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக விரோதிகள் தான் இந்த செயலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பங்குச்சந்தை 2வது நாளாக இன்று இன்று மீண்டும் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி...!

இம்ரான்கானை சந்தித்தேன், ஆனால்.. சகோதரி செய்தியாளர்களிடம் பேட்டி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம்.. அதிகாலையில் பக்தர்கள் கரகோஷம்..!

நேற்று குறைந்த தங்கம் இன்று மீண்டும் உயர்வு.. மீண்டும் 2 லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை..!

வலுவிழந்தாலும் மெதுவாக நகரும் டிட்வா புயல்.. வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments