Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா நிவாரணம்: முதல்வர் நிவாரண நிதிக்கு 100 கோடிக்கு மேல் வந்த பணம்!

Advertiesment
கொரோனா நிவாரணம்: முதல்வர் நிவாரண நிதிக்கு 100 கோடிக்கு மேல் வந்த பணம்!
, புதன், 15 ஏப்ரல் 2020 (17:38 IST)
கொரோனா நிவாரண நிதி அளிக்கும்படி மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி கேட்டிருந்த நிலையில் இப்போது வசூலாகியுள்ள தொகையின் விவரம் வெளியாகியுள்ளது.

கொரோனா பாதிப்பால் இந்தியா முழுவதும் 11,000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஊரடங்கு முதலில் 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்டு இப்போதும் மேலும் 20 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் அதற்கான நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பொதுமக்களிடமும் நிறுவனங்களிடம் இருந்தும் நிதி அளிக்குமாறு முதல்வர் மற்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இந்நிலையில் முதல்வர் நிவாரண நிதிக்குப் பொது மக்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை நிதியளித்து வருகின்றனர். இதுவரை எவ்வளவு நிதி வசூல் ஆகி உள்ளது என்பது தொடர்பான விவரம் இப்போது வெளியாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வரை முதல்வர் நிவாரண நிதிக்கு 134 கோடியே 63 லட்சம் நன்கொடையாக வந்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சார்பாக 14 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து 492 ரூபாய் நிதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மறு உத்தரவு வரும் வரை யாரும் கடையை திறக்க கூடாது: போலீஸ் கெடுபிடியால் மக்கள் அதிர்ச்சி