நடப்பு கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் இருந்ததால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்து வரும் சூழலில் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே படித்து வருகிறார்கள். பள்ளிகள் செயல்படாததால் மாணவர்களுக்கு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. பின்னர் முன்னர் நடத்தப்பட்ட தேர்வுகளை கொண்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் அலகுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கல்வி தொலைக்காட்சி, ஆன்லைனில் நடத்தப்படும் பாடங்களில் இருந்து மாதந்தோறும் அலகுத் தேர்வு நடத்தப்பட வேண்டுமாம்.
அதாவது மாத இறுதியில் அலகுத்தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடத்த வேண்டும் எனவும் வாட்ஸ் ஆப் வாயிலாக 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அலகுத்தேர்வு நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.