Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே இரவில் ரூ9.50 லட்சம் இழந்த மென்பொறியாளர்!

Advertiesment
ஒரே இரவில் ரூ9.50 லட்சம் இழந்த மென்பொறியாளர்!
, ஞாயிறு, 23 ஜனவரி 2022 (11:46 IST)
ஒரே இரவில் ரூ.9.50 லட்சம் இழந்த மென்பொறியாளர்!
திருவள்ளுவர் பகுதியை சேர்ந்த கோகுல் என்ற மென்பொறியாளர் ஒரே இரவில் ரூ.9.50 லட்சம் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
திருவண்ணாமலையை சேர்ந்த சரவணன் என்பவர் குறைந்த முதலீட்டில் பணத்தை இரட்டிப்பாக்க ஆசைவார்த்தை கூறி நிலையில் இதை நம்பி கடந்த 5ம் தேதி இரவு ஒரு மணி அளவில் 200 ரூபாய் முதலீட்டை பரிவர்த்தனையை தொடங்கிய மென்பொறியாளர் கோகுல் விடிவதற்குள் 9 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை சரவணனிடம் கொடுத்து உள்ளார் 
இந்த நிலையில் இண்டர்நெட் பிரச்சனை என கூறி நேரத்தை கடத்திய சரவணன் திடீரென  பணத்தை திருடி சென்று விட்டார்.  தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பொறியாளர் கோகுல், இதுகுறித்து புகார் அளித்துள்ள நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் திருவண்ணாமலை மாவட்டம் ஒன்னுபுரம் கிராமத்தை சேர்ந்த சரவணனை கைது செய்துள்ளனர்
 
மேலும் பெரும் கடனில் சிக்கிய சரவணன் அதிலிருந்து மீள்வதற்கு இந்த யுக்தியை பயன்படுத்தி பலரிடம் 50 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது அம்பலமானது. விரைவில் பணக்காரர் ஆக வேண்டுமென்ற ஆசையில் ஒரே நாளில் ரூ.9.50  லட்சம் ரூபாய் இழந்தை இளைஞருக்கு சைபர் கிரைம் போலீசார் அறிவுறை கூறி எச்சரித்து அனுப்பினர்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் கஷ்டம்தான் முக்கியம்; திருமணத்தை நிறுத்தும் பிரதமர்!