Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு மேலும் ஒருநாள் விடுமுறை: அரசு அறிவிப்பால் உற்சாகத்தில் பொதுமக்கள்

Webdunia
திங்கள், 21 அக்டோபர் 2019 (20:13 IST)
இந்த ஆண்டு தீபாவளி ஞாயிறு அன்று வருவதை அடுத்து அரசு ஊழியர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வந்து பணிபுரியும் ஊழியர்கள் ஞாயிறு அன்று தீபாவளியை கொண்டாடி முடித்துவிட்டு, அன்று இரவே திரும்ப வேண்டிய நிலை இருந்தது. 
 
எனவே திங்கள் அன்றும் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்றும், அதற்கு பதிலாக வேறொரு நாளில் பணி நாளாக வைத்து கொள்ளலாம் என்றும் அனைத்து பணியாளர்கள் சங்கங்களும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனர்
 
இந்த வேண்டுகோள் பரிசீலிக்கப்பட்டு தற்போது திங்கள் அன்றும் அரசு விடுமுறை என அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தீபாவளியை பொதுமக்களுக்கு மூன்று நாள் கிடைத்தது மட்டுமின்றி தீபாவளிக்கு மறுநாள் திங்கள் மாலை ஊரை விட்டு கிளம்பினால் போதும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.
 
தீபாவளியை கொண்டாட கூடுதலாக ஒருநாள் விடுமுறை அறிவித்த அரசுக்கு ஊழியர்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments