Publish Date: Thu, 11 Mar 2021 (20:55 IST)
Updated Date: Thu, 11 Mar 2021 (20:57 IST)
பாஜகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்த பிக்பாஸ் போட்டியாளர்!
கடந்த சில வருடங்களாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகிறார்கள் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி வேறு கட்சிகளில் உள்ள திரை உலகினர் கூட அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்ற செய்தியை பார்த்து வருகிறோம். இன்று கூட நடிகர் செந்தில் அமமுக நூலில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தற்போது பாஜகவிலிருந்து விலகி தினகரனின் அம்மா முன்னேற்றக் கழகத்தில் பிக்பாஸ் போட்டியாளர் இணைந்துள்ளார். பாடகரும், பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மோகன் வைத்யா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது அவர் அக்கட்சியில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார்
இன்று அவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை நேரில் சந்தித்து தன்னை அமமுகவில் இணைத்துக் கொண்டார். இதனையடுத்து அவருக்கு வரும் தேர்தலில் அமமுகவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது