Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன்..பிரதமர் மோடி டிவிட்

Arun Prasath
திங்கள், 28 அக்டோபர் 2019 (16:41 IST)
சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன் என பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் 2 வயது குழந்தை சுர்ஜித், ஆழ்துளை கிணற்றில் விழுந்ததையடுத்து, குழந்தையை உயிருடன் மீட்பதற்காக 4 நாட்களாக போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது ஆழ்துளை கிணறு அருகே ஒரு சுரங்கம் தோண்டி, குழந்தையை மீட்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.

நள்ளிரவில் ரிக் என்ற இயந்திரம் வரவழைக்கப்பட்டு குழி தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீடீரென இயந்திரம் பழுதானதை தொடர்ந்து, இரண்டாவது இயந்திரம் கொண்டுவரப்பட்டு அதிகாலை 4 மணி முதல் தோண்டும் பணியை ஆரம்பித்தனர். 

பாறைகள் மிகவும் கடினமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில்,  இரண்டாவதாக கொண்டுவரப்பட்ட ரிக் இயந்திரமும் பழுதடைந்த்தாக தகவல் வெளியானது. பழுதை சரிபடுத்துவதற்கான வேளையில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில். பள்ளம் தோண்டும் பணி நிறுத்தப்படது. இதுவரை 45 அடி வரை பள்ளம் தோண்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதனையடுத்து ரிக் இயந்திரத்திற்கு பதிலாக தற்போது 1,200 குதிரை திறன் கொண்ட போர்வெல் மூலம் துளை போடப்படுவதாக கூறப்பட்டது. தற்போது ரிக் இயந்திரத்தின் மூலம் மீண்டும் பணி தொடர்ந்திருக்கிறது. இந்நிலையில் பிரதமர் மோடி, தனது டிவிட்டர் பக்கத்தில், சுர்ஜித்திற்காக பிரார்த்திக்கிறேன்” என பகிர்ந்துள்ளார். மேலும் மீட்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமியிடம் கேட்டறிந்ததாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments