Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”எனக்கு இட்லி, வடை, ரொம்ப பிடிக்கும்..” ஐஐடியில் மோடி

”எனக்கு இட்லி, வடை, ரொம்ப பிடிக்கும்..” ஐஐடியில் மோடி

Arun Prasath

, திங்கள், 30 செப்டம்பர் 2019 (11:37 IST)
இன்று சென்னை ஐஐடி நிகழச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, தனக்கு தமிழர்கள் உணவான இட்லி, வடை மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.

இன்று சென்னை ஐஐடி விழாவில், கலந்துகொண்ட பிரதமர் மோடி, இந்தியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இணைந்து நடத்தும் “ஹேக்கத்தான்” தொழில்நுட்ப போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மோடி, ஹேக்கத்தான் வெற்றிக்கு உதவிய சிங்கப்பூர் கல்வித்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மோடி, ஹேக்கத்தான் இளைய தலைமுறையினரின் அறிவுத்திறனை வளர்க்க உதவும், இந்தியா 5 லட்சம் கோடி பொருளாதாரமாக வளர ஹேக்கத்தான் உதவும்” என கூறினார்.

மேலும் கற்சிறபங்கள், பழமையான கோயிலுக்கு பெயர் போன மாமல்லபுரத்தை நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் வெளிநாட்டு மாணவர்கள் பார்வையிட வேண்டும் என கூறினார்.இதனை தொடர்ந்து தமிழர்களின் விருந்தோம்பலை குறித்து பேசிய, மோடி, ”தமிழர்களின் விருந்தோம்பல் மிகவும் சிறந்தது, அவர்களின் இட்லி, தோசை, வடை என அனைத்தும் எனக்கு மிகவும் பிடிக்கும்” என கூறினார். பின்பு ஐஐடியில் உள்ள அறிவியல் கண்காட்சியினை பார்வையிட்டார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரயான் 2 தோல்வியா?? பின் வாங்கிய இஸ்ரோ சிவன்!