கடற்கரை குப்பைகளை கைகளால் அள்ளிய மோடி..

Arun Prasath
சனி, 12 அக்டோபர் 2019 (09:49 IST)
சீன அதிபருடனான சந்திப்பு நிகழ்ச்சியை தொடர்ந்து கோவளம் விடுதியில் தங்கியிருந்த பிரதமர் மோடி, காலை கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்ட போது, தனது கைகளாலேயே, குப்பைகளை அள்ளிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சீன அதிபர் ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் சந்திக்கும் நிகழ்வின் ஒரு அங்கமாக இருவரும் சேர்ந்து நேற்று மாமல்லபுரத்தின் புராதான சின்னங்களை பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து இன்று இருவரும் கோவளத்தில் சந்திக்கவுள்ளனர். இந்நிலையில் கோவளம் விடுதியில் தங்கியிருந்த மோடி, காலை கடற்கரைக்கு நடைபயணம் மேற்கொண்டார். அப்போது 30 நிமிடங்கள் கடற்கரையிலுள்ள குப்பைகளை தனது கைகளாலேயே அள்ளினார்.

பின்பு அந்த குப்பைகளை ஊழியர் ஜெயராஜிடம் ஒப்படைத்தார். ஒரு நாட்டின் பிரதமர் தனது கைகளாலேயே குப்பைகளை அள்ளிய சம்பவம், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பட்டப்பகலில் பள்ளி மாணவியை கொலை செய்யும் அளவிற்கு, துணிச்சல் எங்கிருந்து வந்தது? ஈபிஎஸ் ஆவேசம்

TN TET 2026: சிறப்பு டெட் தேர்வு!.. விண்ணப்பங்கள் வரவேற்பு!.. முழு தகவல்!...

பாஜகவும் தேர்தல் ஆணையமும் சதி: தொல். திருமாவளவன் குற்றச்சாட்டு!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மண்டலமாக வலுப்பெறும்: நவம்பர் 21 முதல் கனமழை..!

எங்கருந்து வந்தீங்க?!. SIR படிவம் தொடர்பாக கோபப்பட்ட மன்சூர் அலிகான்!..

அடுத்த கட்டுரையில்
Show comments