சென்னை மாநகராட்சி சார்பில் விரைவில் மாட்டு கொட்டகைகள் கட்டப்பட இருப்பதாகவும் முதல் கட்டமாக பேசின் பிரிட்ஜ் சாலையில் 100 மாடுகள் தங்க வைக்கும் அளவுக்கு நவீன மாட்டு கொட்டகை அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாகவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
மேலும் கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு மைக்ரோ சிப் பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்திருப்பதாகவும் இன்று நடந்த கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டது.
அதேபோல் வளர்ப்பு நாய்களுக்கு வயதாகிவிட்டால் அல்லது உடல் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை வளர்ப்பவர்கள் தெருவில் விட்டு விடுகின்றனர் என்றும் இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றும் மைக்ரோ சிப் பொருத்தி அதன் முழு விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்தால் வளர்ப்பு பிராணிகளை கண்காணிக்க முடியும் என்றும் தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்களை மைக்ரோ சிப் உதவியுடன் கண்டறிந்து உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் ஏற்றப்பட்டுள்ளது