Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடைகளை கழற்றி பணம் பறிக்கும் கும்பல் : அதிர்ச்சி தகவல்

ஆடைகளை கழற்றி  பணம் பறிக்கும் கும்பல் : அதிர்ச்சி தகவல்
, வியாழன், 21 மார்ச் 2019 (15:08 IST)
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒடு தொழில் அதிபரை ஆடைகளை கழற்றி பணம் பறித்த கும்பலை போலீஸார் கைது செய்துள்ல சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்தவர் அப்துல் ரப் ஆரிஃப்.  அப்பகுதியில் இவர் தோல் பதனிடும் மற்றும் காலனி ஏற்றுமதி தொழில் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் தன் தாயிற்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள ஒரு செவிலியரை தேடி வந்தார். அப்பொது ஒரு பெண் தன் இல்லத்தில் ஒரு செவிலிப்பெண் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
 
இதை உண்மை என்று எண்ணி குறிப்பிட்டமுகவரியில் அப்பெண்ணின் இல்லத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அப்துல் எதிர்பாராத வகையில் அவரது ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கிவிட்டு, ஒரு பெண்ணை படுக்கையில் படுக்க வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
 
இதனையடுத்து அந்த போட்டோவை காட்டி பணம் கேட்டு உள்ளனர்.  மிரட்டலும் விடுத்துள்ளனர்.அப்துல் தன்னிடம் இருந்த ரூ.4000 மட்டும் கொடுத்துள்ளார். ஆனால் அவரை விடாமல் அவரிடமிருந்த ஏடிஎம் கார்டை பறித்து பின் நம்பரை அவரிடமிருந்து கேட்டு விட்டு ஒரு அறைவில்  வைத்து பூட்டிவிட்டனர். அந்த ஏ.டி,எம் கார்டில் ரூ. 2 லட்சத்துக்கு நகைகள் வாங்கியதுடன் 1 லட்சம் பணத்தையும் எடுத்துள்ளனர். 
webdunia
பிறகு கும்பல் , அப்துலை ஆட்டோவில் அழைத்துபோன போது, அவர் கூச்சல் போடவே,பொதுமக்கள் இவர்களை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
webdunia
இதனையடுத்து போலீஸார் பிடிபட்ட கும்பலிடம் தீவிரமாக விசாரணை செய்தனர்.  பின்னர் நாகூரில் தலைமறைவாக இருந்த இதே கும்பலைச் சேர்ந்த பத்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து இதுவரை ரூ. 50000மேல் பணத்தை மீட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
webdunia
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெச்.ராஜா ஒரு முந்திரிக் கொட்டை: ஈவிகேஸ் இளங்கோவன் செம கலாய்!!!