Publish Date: Tue, 09 Mar 2021 (14:38 IST)
Updated Date: Tue, 09 Mar 2021 (14:52 IST)
கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்த தேமுதிக மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாததால் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், தங்களது கூட்டணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு மக்கள் நீதி மய்யம் அழைப்பு விடுத்துள்ளது. விஜயகாந்த், பிரேமலதாவை சந்திக்கவுள்ளதாக மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் பொன்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.