Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சட்டசபையில் விடாமல் சிரித்த தினகரன்: கிச்சுகிச்சு மூட்டிய செம்மலை!

Advertiesment
சட்டசபை
இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதில் இன்று அதிமுக எம்எல்ஏ செம்மலை பேசியது, சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
 
தமிழக சட்டசபையின் மூன்றாம் நாள் கூட்டமான இன்று எம்எல்ஏக்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகின்றனர் அதிமுக அமைச்சர்கள். இந்நிலையில் சட்டசபையில் பேசிய அதிமுக எம்எல்ஏ செம்மலை, சமீபத்தில் வந்த ஓகி புயலை ஓகே புயல் என்றும் காங்கிரஸ் எம்எல்ஏ பிரின்ஸை ஜேம்ஸ் என்றும் கூறினார்.
 
இதனால் அவையில் அனைவரும் சிரித்தனர். குறிப்பாக டிடிவி தினகரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் விடாமல் சிரித்தனர். மேலும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் டுவிட்டரில் உள்ள ப்ளூடிக் குறித்த கேள்விக்கு ப்ளூடூத் குறித்து விளக்கம் அளித்து சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதல் தோல்வியால் குடும்பமே தற்கொலை : நெல்லையில் அதிர்ச்சி