Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எம்எல்ஏ கருணாஸ் மு.க.ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!

எம்எல்ஏ கருணாஸ் மு.க.ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!

எம்எல்ஏ கருணாஸ் மு.க.ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு!
, வெள்ளி, 23 ஜூன் 2017 (13:31 IST)
அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினர்.


 
 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை  விதிக்கப்பட்டு ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பேராறிவாளனின் பரோல் தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து அதற்கு ஆதரவு அளிக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்து கருணாஸ் உள்ளிட்ட அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர்.
 
பேரறிவாளனின் உடல் நிலை காரணமாக அவரை பரோலில் சில நாட்கள் விடுமாறு அவரது சார்பில் பரோலுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. ஆனால் பேரறிவாளனை பரோலில் விட முடியாது என சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது.
 
ஆனால் அவரது தாயார் அற்புதம்மாள் இதனை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று பரோல் வழங்குவது மாநில அரசின் உரிமை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் செயல்படும் இந்த அரசு பேரறிவாளனுக்கு பரோல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
 
இது தொடர்பாக அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான கருணாஸ், தனியரசு, தமீமுன் அன்சாரி ஆகியோரையும் அவர் சந்தித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலினை சந்தித்த அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் பேரறிவாளன் பரோல் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து அதற்கு ஆதரவு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாதி மனிதன், பாதி மிருகம்; அதிசய உயிரனம்: தென் ஆப்பிரிக்காவில் பரபரப்பு!!