Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாஸ் செய்தது நியாயமா?: கேள்வி கேட்டால் சிறையா?

கருணாஸ் செய்தது நியாயமா?: கேள்வி கேட்டால் சிறையா?

கருணாஸ் செய்தது நியாயமா?: கேள்வி கேட்டால் சிறையா?
, செவ்வாய், 25 அக்டோபர் 2016 (08:17 IST)
சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்து சட்டமன்ற உறுப்பினர் ஆனவர் நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை தலை கருணாஸ். இவர் திருவாடனை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


 
 
ஆனால் தன்னுடைய தொகுதி பக்கமே கருணாஸ் போகாமல் இருப்பதாக தொகுதிவாசிகள் பேசி வருகின்றனர். சமீபத்தில் சிறுவர்களுக்கு இடையே நடந்த பிரச்சனை ஒன்றில் கருணாஸ் அழுத்தம் கொடுத்து தலித் சிறுவர்கள் ஐந்து பேர் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின் எட்டு பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இது அங்கு சர்ச்சையானதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் கருணாஸ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள விருந்தினர் மாளிகையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் தங்கியிருந்தார். அப்போது கருணாஸுக்கு செல்போனுக்கு கால் செய்த அவரது தொகுதிவாசி ஒருவர் தொகுதி மக்களாகிய நாங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். ஆனால், நீங்கள் தொகுதிக்கு வருவதே கிடையாது என பேசியுள்ளார்.
 
அப்போது கருணாஸுக்கும், அந்த நபருக்கும் இடையே வாக்குவாதம் வந்துள்ளது. இதனையடுத்து கருணாஸ் காவல் நிலையத்துக்கு சென்று அந்த நபர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக புகார் செய்துள்ளார்.
 
இதனையடுத்து அந்த செல்போன் எண்ணை ஆய்வு செய்த காவல்துறையினர் திருவாடானை அருகே புல்லூர் கிராமத்தை சேர்ந்த அகிலன் என்பவரை கைது செய்தனர். தொகுதி மக்கள் கேள்வி கேட்டால், அவர்களுக்கு செய்து கொடுக்க வேண்டியது ஒரு சட்டசபை உறுப்பினரின் கடமை. ஆனால் கருணாஸ் போலீஸில் புகார் அளித்து அவரை கைது செய்து சிறையில் தள்ளுவது எந்த வகையில் நியாயம் என அவரது திருவாடனை தொகுதியில் பேசுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீனாவில் பயங்கர வெடி விபத்து: 94 பேர் படுகாயம்