அதிமுக இரண்டாக உடையப் போகிறது..! – ஆறுக்குட்டி எச்சரிக்கை!

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2022 (11:23 IST)
அதிமுகவில் ஒற்றை தலைமை ஏற்பது குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில் கட்சி இரண்டாக உடையும் அபாயம் எழுந்துள்ளதாக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஓபிஎஸ் அணி, ஈபிஎஸ் அணி என பிரிந்து ஆலோசனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பேசியுள்ள அதிமுக எம்.எல்.ஏ ஆறுக்குட்டி “என்னைக் கேட்டால் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் இருவருமே அதிமுக பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும். வேறு யாராவது தலைமை தாங்கட்டும். இரண்டு பேரும் சண்டையிட்டுக் கொள்வதால் கட்சி உடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments