அம்மா அழைப்பு மையத்தை குறைகூற எண்ணி, பின்னர் அந்த எண் செயல்பட்டதால் பொதுக்கூட்ட மேடையில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சங்கடப்பட்ட நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பொதுக்கூட்ட மேடையில் அதிமுக ஆட்சியின் திட்டங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது, ஜெயலலிதா தொடங்கி வைத்த அம்மா அழைப்பு மையத்தை பற்றி குறை கூறி பேசினார்.
அப்போது, நேரடியாக நிரூபிப்பதற்காக அம்மா அழைப்பு மையதின் தொடர்பு எண் 1100யை தொடர்புக்கொண்டார். ஆனால், அது செயல்பட வில்லை என்று தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, உடனே, தன்னுடைய சார்பில் தனது தொகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடர்புக்கொள்ளலாம் என்று கூறிய அவர், அந்த எண்ணுக்கு முயற்சித்தார். ஆனால், அந்த எண் வேலை செய்யவில்லை. அப்போது அவர் நொந்து போனார்,
மறுபடியும், அம்மா அழைப்பு மையத்தை மற்றவரிடம் கூறி அழைக்க சொல்கிறார். அப்போது அம்மா அழைப்பு மையத்தில் இருந்து பதிவு செய்யப்பட்ட குரல் ஒலிக்கிறது. இதனால், திமுக தொண்டர்களிடம் இது குறித்து பதில் கூற முடியாமல் முக ஸ்டாலின் நலுவினார்.
ஆனால், மறுபடியம் அவர், தனது தொகுதி மக்களுக்காக அறிவிக்கப்பட்ட எண்ணை மீண்டும் தொடர்புக்கொள்ளும்போது அந்த எண் வேலை செய்யவில்லை. இதனால் மேடையில் சங்கடப்பட்ட ஸ்டாலின், இதுகுறித்து பேசாமல் தன்னுடைய பேச்சை திசை திருப்பினார்.
இந்த வீடியோ காட்சி உங்கள் பார்வைக்கு...