Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா தேவையில்லாதது! – மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

Webdunia
செவ்வாய், 6 ஜூலை 2021 (11:34 IST)
மத்திய அரசின் ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக பலரும் குரல் கொடுத்து வரும் நிலையில் அந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய அரசு திரைப்படங்கள் வெளியிட ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் திரைத்துறையினர் இடையே இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நேற்று நடிகர் கார்த்தி, ரோகிணி உள்ளிட்டோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இதுகுறித்து கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் ஒளிபதிவு திருத்த சட்ட மசோதா மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையிலும், கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையிலும் இருப்பதாகவும், எனவே ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments