புலிகேசி புறா வறுத்து தின்பது போல எடப்பாடி செயல்படுகிறார்! – ஸ்டாலின் அறிக்கை!

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (14:00 IST)
இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு செய்து வரும் குளறுபடிகளை கண்டுகொள்ளமால் சமூக நீதி பற்றி எடப்பாடி பேசுவதாக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தி வந்த இடஒதுக்கீடு உரிமைகளை நிராகரித்துவிட்டு மத்திய அரசு பிற்படுத்தப்பட்ட மக்களையும், பட்டியலின மக்களையும் புறம்தள்ளும் வகையில் மத்திய கல்வி நிறுவனங்களிலும், நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரிகளிலும் அநீதி இழைத்து வருவதாக ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ”மத்திய அரசுக்கு பணிந்து இந்த அநீதி குறித்து எதுவும் பேசாமல் சமூகநீதிக்காக தான் உழைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, புலிகேசி புறா வறுத்து தின்றது போல எடப்பாடி பழனிசாமி ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார்.” என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

உச்சம் சென்ற வெள்ளி விலையில் திடீர் சரிவு.. தங்கத்தின் நிலவரம் என்ன?

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? டிசம்பர் 24-ல் அறிவிப்பு: ஓபிஎஸ் தகவல்; பாஜக சமரசம் எடுபடவில்லையா?

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments