நல்லவேளை இந்த அறிவுக்கொழுந்துகள் காமராஜர் காலத்தில் இல்லை!? - எடப்பாடியாரை கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

Prasanth K
செவ்வாய், 15 ஜூலை 2025 (10:08 IST)

இன்று காமராஜர் பிறந்தநாளில் அவரது சாதனைகள் குறித்து பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக எடப்பாடி பழனிசாமியையும் கிண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

 

தமிழக முன்னாள் முதல்வரான பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் 2 கி.மீ தொலைவுக்கு ஒரு பள்ளி என்ற இலக்குடன் செயல்பட்டு மாணவர்களுக்கு கல்வி வழங்கியதுடன், மதிய உணவு திட்டம் அளித்து மாணவர்கள் பசியையும் ஆற்றிய காமராசரை ‘கல்வி கண் திறந்த’ காமராசர் என்றே அனைவரும் அழைக்கின்றனர். அவரது பிறந்த நாளான ஜூலை 15, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

 

இந்நிலையில் இன்று காமராசரை வாழ்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அதில் அவர் “அன்று பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்!

 

நல்லவேளை, “பள்ளியில் கல்விதான் கொடுக்க வேண்டும்; சோறு போட அது என்ன ஹோட்டலா?” என்று அதிமேதாவியாய்ப் பேசும் அறிவுக்கொழுந்துகள் இல்லை அன்று. அதனால்தான், எத்தனை நன்மை தமிழ்நாட்டிற்கு இன்று!

 

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்!” என்று கூறியுள்ளார்.

 

சமீபத்தில், கோயில்களில் வரும் வருமானத்தை வைத்து அறநிலையத்துறை கல்வி சாலைகள் அமைத்தது குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அவரைதான் முதல்வர் மறைமுகமாக கிண்டல் செய்வதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல மாதங்களாக வேலை தேடியும் கிடைக்கவில்லை.. கண்ணீருடன் அமெரிக்காவில் இருந்து வெளியேறிய இந்திய பெண்..!

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.. இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!

ட்ரம்ப் விதித்த வரியால் இந்தியாவின் வளர்ச்சியில் சிறு சரிவு! - ஆசிய வளர்ச்சி வங்கி!

வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.. கனமழைக்கு வாய்ப்பா?

புஸ்ஸி ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள்! - எங்கே இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த்?

அடுத்த கட்டுரையில்
Show comments