Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாதி, மதம் கடந்த ஒற்றுமை திருவிழா ஓணம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாதி, மதம் கடந்த ஒற்றுமை திருவிழா ஓணம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
, புதன், 7 செப்டம்பர் 2022 (15:01 IST)
நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரள மக்கள் கொண்டாடும் ஓணம் பண்டிகை தமிழகத்தில் பல மாவட்ட மக்களால் கொண்டாடப்படுகிறது. நாளை ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறார்கள்.

இந்நிலையில் மக்களுக்கு ஓணம் வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் “மலையாள மண்ணின்‌ மக்கள்‌ உலகின்‌ எந்த மூலையில்‌ இருந்தாலும்‌ எழுச்சியோடும்‌ மகிழ்ச்சியோடும்‌ கொண்டாடும்‌ பண்பாட்டுப்‌ பெருவிழாவான திருவோணம்‌ நாளை (செப்டம்பர்‌- 8) கொண்டாடப்பட இருக்கிறது

நல்லரசு புரியும்‌ வேந்தனை வஞ்சகத்தால்‌ வீழ்த்தினாலும்‌, வரலாற்றிலும்‌ மக்கள்‌ மனங்களிலும்‌ அவன்‌ புகழ்‌ என்றும்‌ மறையாது என்பதை இன்றளவும்‌ எடுத்துக்காட்டும்‌ நாள்‌ ஓணம்‌ திருநாள்‌.

அத்தப்பூ கோலமிட்டு, பட்டாடையும்‌ புத்தாடையும்‌ உடுத்தி, அறுசுவை உணவருந்திச்‌ சேர நாட்டவர்‌ கொண்டாடும்‌ அறுவடைத்‌ திருவிழா ஒணம்‌.
 
webdunia

"மாயோன்‌ மேய ஒண நன்னாள்‌” எனச்‌ சங்க இலக்கியமாம்‌ மதுரைக்‌ காஞ்சியிலும்‌ குறிப்பிடப்படும்‌ இத்திருநாள்‌ திராவிடநிலத்தின்‌ தொன்மையையும்‌ நம்மிடையேயான பண்பாட்டு உறவையும்‌ காட்டும்‌ விழா.

கேரள மக்கள்‌ அனைவரும்‌ சாதி, மதம்‌ கடந்து அனைவரும்‌ ஒண்றிணைந்து, கொண்டாடி ஒற்றுமையின்‌ சிறப்பை உணர்த்தும்‌ சமூக நல்லிணக்க விழாவாக ஒணம்‌ இருக்கிறது.

அத்தகைய திருநாளைத்‌ தமிழ்நாட்டில்‌ உள்ள மலையாளி உடன்பிறப்புகளும்‌ ஏற்றத்துடன்‌ கொண்டாடுவதற்கேற்ப, இங்குள்ள எல்லையோர மாவட்டங்களிலும்‌ சென்னையிலும்‌ அரசு விடுமுறை அளித்தது கழக அரசு என்பதை இத்தருணத்தில்‌ நினைவுகூர்ந்து, உலகெங்கும்‌ வாழும்‌ மலையாள மக்களுக்குத்‌ தமிழ்நாட்டின்‌ சார்பாக எனது ஒணத்‌ திருநாள்‌ வாழ்த்துகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

அன்பும்‌ ஒற்றுமையும்‌ சமத்துவழும்‌ சகோதர உணர்வுமே நம்‌ வலிமை என்பதைப்‌ பறைசாற்றுவதாக இத்தகைய பண்பாட்டுத்‌ திருவிழாக்கள்‌ அமையட்டும்‌!” என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காசிமேட்டில் கப்பல் வாங்க போறீங்கலாமே- அண்ணாமலையை கிண்டலடித்த திமுக பிரமுகர்