Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புத்தாண்டில் இன்னும் தீவிரமாக மக்கள் பணி தொடரும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!

Advertiesment
புத்தாண்டில் இன்னும் தீவிரமாக மக்கள் பணி தொடரும்! – முதல்வர் மு.க.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து!
, வெள்ளி, 31 டிசம்பர் 2021 (15:00 IST)
நாளை உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

நாளை புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பாதிப்புகள் காரணமாக பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் கடற்கரை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கொண்டாட்டங்களை தவிர்க்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்து கூறியுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் “நமது அரசின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையினை நிறைவேற்றும் வகையில் நிர்வாகச் செயல்பாடுகள் புத்தாண்டில் புதுப்பொலிவு பெறும். மக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டு செயல்படும் நமது அரசு புத்தாண்டில் இன்னும் கூடுதலான செயலாற்றலுடன் மக்கள் நலனுக்கான பணிகளைத் தொடர்ந்திட அரசு உறுதிபூண்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜவுளி மீதான ஜிஎஸ்டி வரி உயர்வு தள்ளிவைப்பு!!