Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்த நேரத்தில்தான் உங்கள் உதவி அவசியம்! மன்மோகன் சிங் குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்!

இந்த நேரத்தில்தான் உங்கள் உதவி அவசியம்! மன்மோகன் சிங் குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்!
, திங்கள், 11 மே 2020 (08:48 IST)
இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய முன்னாள் பிரதமரும், பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் உடல்நல குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் அவருக்கு நெஞ்சுவலி என தகவல்கள் பரவிய நிலையில், அவர் காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மன்மோகன் சிங் நலமுடன் திரும்ப வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரும், அவர்களது கூட்டணி கட்சியினரும் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ”முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் நலம்பெற வேண்டுகிறேன். இதுபோன்ற தருணங்களில் அவரது சேவைகள் இந்தியாவிற்கு அவசியம். எனவே அவர் பூரண நலத்துடன் விரைவில் திரும்புவார் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாஸ்மாக்கில் சரக்கு திருடிய டாஸ்மாக் ஊழியர்: கைது செய்த போலீஸார்!