Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்ற ஸ்டாலின்: என்ன முடிவா இருக்கும்??

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (14:19 IST)
அண்ணா பல்கலை.க்கு எதிராக தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். 
 
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பாக சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது என அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல் வெளியிட்டுள்ளார்.  
 
அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மாணவர்களுக்கான 69% இடஒதுக்கீடு கேள்விக்குறியாகும். அதேபோல உயர் சிறப்பு அந்தஸ்து வந்தால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு, கூடுதல் கல்விக்கட்டணம் வர வாய்ப்பு நேரிடும். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்று டிவிட்டரில் பின்வருமாறு பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின், திமுக-வின் கடும் எதிர்ப்பு, #SaveAnnaUniversity போராட்டத்திற்குப் பிறகு, அண்ணா பல்கலை.க்கு உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என அதிமுக அரசு அறிவித்துள்ளது. வெறும் அறிவிப்பு மட்டும் போதாது. மத்திய அரசிடம் கடிதம் வழியாகத் தெரிவிக்க வேண்டும். #DismissSurappa என தமிழக அரசு  பரிந்துரைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 
 
மேலும், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்ற தமிழக அரசின் முடிவு காலதாமதமானது என்றாலும் வரவேற்கத்தக்கது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

மெஜாரிட்டியை தாண்டி பாஜக அபார வெற்றி.. இந்தியா கூட்டணி படுதோல்வி..!

இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை..!

மகாராஷ்டிரா, ஜார்கண்ட்.. இரு மாநிலங்களிலும் பாஜக முன்னிலை.. வயநாடு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments