Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்களும் விவசாயிகளின் நலம் விரும்பிதான்! – பச்சை துண்டுடன் வயலில் இறங்கிய ஸ்டாலின்

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (11:35 IST)
மத்திய அரசின் விவசாய மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல கட்சிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளன. சில நாட்களுக்கு முன்பு விவசாய மசோதாவை எதிர்த்து விவசாய அமைப்புகள், தொழிற்சங்கங்கள் இணைந்து நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில் இன்று திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தமிழகம் முழுவதும் விவசாய மசோதாவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்காக காஞ்சிபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் செல்லும் வழியில் அங்குள்ள வயல்பகுதிக்கு சென்றார். அங்குள்ள விவசாயிகளிடம் பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அதுபோல விவசாய போராட்டத்திற்காக செல்வதால் பச்சைத்துண்டு, பச்சை மாஸ்க் அணிந்து சென்றார்.

தமிழக முதல்வர் எடப்பாடியார் தன்னை ஒரு விவசாயி என்று பல இடங்களில் கூறி வரும் நிலையில், மு.க.ஸ்டாலினின் இந்த மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

இன்று 75வது அரசியலமைப்பு தினம்.. கமல்ஹாசன் அறிக்கை..!

வங்கதேசத்தில் இந்துமத தலைவர் கைது.. நாட்டை விட்டு வெளியேற தடை..!

கனமழை எதிரொலி: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments