Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்: மெகா கூட்டணிக்கு புதிய திட்டமா?

Webdunia
ஞாயிறு, 2 டிசம்பர் 2018 (16:19 IST)
பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் ஆறு மாதங்கள் மட்டும் இருக்கும் நிலையில் தேசிய கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியில் தீவிரமாக உள்ளது. குறிப்பாக வலுவாக இருக்கும் பாஜகவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வேலையில் சில தலைவர்கள் முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் வரும் 9ஆம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு பாஜகவை வீழ்த்த வியூகம் அமைக்கவுள்ளனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக திமுக தரப்ப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி உள்பட பலர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால் டிசம்பர் 9ஆம் தேதி மெகா கூட்டணிக்கு புதிய திட்டம் ஒன்று உருவாக்கப்படும் என தெரிகிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இணைந்து எத்தனை திட்டங்கள் வகுத்தாலும் அதை தவிடுபொடியாக்கி ஆட்சியை தக்க வைப்போம் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

அடுத்த கட்டுரையில்
Show comments