Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இமெயில் மூலமா 6 லட்சம் மனு அனுப்பியிருக்கோம்! – மு.க.ஸ்டாலின் ட்வீட்!

Webdunia
வெள்ளி, 29 மே 2020 (12:20 IST)
‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் ஒரு லட்சம் மனுக்கள் பெற்று அனுப்பப்பட்டுள்ள நிலையில் மேலும் 6 லட்சம் மனுக்கள் இமெயில் மூலமாக அளிக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ள நிலையில் பொருளாதார ரீதியாக மாநிலங்கள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன. மக்கள் அன்றாட தேவைகள் மற்றும் சுகாதார ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வதாக திமுக கூறிவந்த நிலையில், மக்களின் கோரிக்கைகளை பெற்று அதை அரசிடம் அளித்து நடவடிக்கை எடுப்பதற்காக “ஒண்றினைவோம் வா” என்ற திட்டத்தை தொடங்கியது திமுக.

தமிழகம் முழுவதும் பல மக்களிடமிருந்தும் சுமார் 1 லட்சம் மனுக்களை பெற்று தலைமை செயலாளரிடம் ஒப்படைத்தார் திமுக எம்பி டி.ஆர்.பாலு. அந்த மனுக்களில் கோரிக்கை எதுவும் இல்லை, மாறாக உணவு பொருட்கள் பற்றாக்குறை போன்ற சில இருந்தன. அவர்றையும் குறித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேரடி மனுக்கள் தவிர ஒன்றிணைவோம் வா தளத்திற்கு மின்னஞ்சல் மூலமாக 6 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவறை அரசுக்கு அனுப்பியுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ள அவர் ” முதற்கட்டமாக 1லட்சம் கோரிக்கை மனுக்கள் அனுப்பிய நிலையில், மின்னஞ்சல் வழியாக மேலும் பகிரும் 6லட்ச கோரிக்கை மனுக்களை முதல்வர் உடனடியாக கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒன்றிணைவோம் வா-வில் வெளியிடப்பட்டுள்ள இக்கோரிக்கைகள் ஒவ்வொன்றும் முக்கியமானது” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments