Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேர்தலுக்காக நாடகம் ஆடாதீர் - முதல்வரை எச்சரித்த ஸ்டாலின்!

Advertiesment
தேர்தலுக்காக நாடகம் ஆடாதீர் - முதல்வரை எச்சரித்த ஸ்டாலின்!
, வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (15:11 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை செய்ய குடியரசுத் தலைவருக்கே அதிகாரமுள்ளது என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்து, தமிழக அரசு அளித்த பரிந்துரையை 2 ஆண்டுகள் கழித்து நிராகரித்துள்ளார்.
 
இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சி.வி. சண்முகம், 7 பேர் விடுதலையில் சட்ட ரீதியாக ஆலோசிக்கப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது இதுகுறித்து பேசியுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், 
 
தேர்தலுக்காக நாடகம் நடத்தாமல் 7 பேர் விடுதலைக்கு உரிய நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும் என்று உள்ளார். மேலும், குடியரசுத் தலைவரை நாளைக்கே சந்திக்க முதலமைச்சர் சென்றாலும், திமுக எம்.பி.க்களும் உடன் வர தயார் என்று அவர் காட்டமாக கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் அனைத்து வழக்குகளும் வாபஸ் - முதல்வர் அறிவிப்பு!