Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ - தீர்வு பணிகள் துவங்கியது!

ஸ்டாலின்
Webdunia
சனி, 8 மே 2021 (16:00 IST)
’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ புகார் மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு துறைக்கான பணிகள் துவங்கியுள்ளது. 

 
தேர்தலின் போது புகார் மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு காண புதிய துறை ஒன்றை நியமிக்கவும் முடிவு செய்துள்ளார் முதல்வர் முக ஸ்டாலின். ஆம், புகார் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம் செய்யப்படவுள்ளது. திமுக தனது தேர்தல் பரப்புரையின் போது பெற்ற புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கிடைக்கும் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  
 
இதனிடையே, புதிதாக நியமிக்கப்பட உள்ள துறைக்கு திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகிய நிலையில் இந்த பொறுப்பு ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா சதீஷிடம் வழங்கப்பட்டது. பின்னர் கோரிக்கை மனுக்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியின் சாவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறைக்கான பணிகள் துவங்கியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் வரை மெட்ரோ.. நில கையகப்படுத்த ஒப்புதல்..!

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments