Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாக்டவுனை கண்டு கலங்க வேண்டாம்; இந்தாங்க கொரோனா நிவாரணம்! – இன்று டோக்கன் விநியோகம்!

Advertiesment
லாக்டவுனை கண்டு கலங்க வேண்டாம்; இந்தாங்க கொரோனா நிவாரணம்! – இன்று டோக்கன் விநியோகம்!
, திங்கள், 10 மே 2021 (08:31 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக இன்று முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் கொரொனா இரண்டாம் அலை தீவிரமாக பரவ தொடங்கியுள்ளதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் முழு ஊரடங்கு 2 வாரங்கள் நீடிக்கும். இந்நிலையில் முன்னதாக அறிவித்த கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் அளிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான டோக்கன்களை இன்று முதல் ரேசன் கடை பணியாளர்களே நேரடியாக அட்டைதாரர்கள் வீட்டில் வழங்க உள்ளனர். அதில் பணம் பெறுவதற்கான நேரம், காலம் குறிப்பிடப்பட்டிருக்கும். மே 15 முதல் டோக்கன் வழங்கும் பணி தொடங்க உள்ள நிலையில் ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் நிவாரண தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் vs ஈபிஸ்; எதிர்க்கட்சி தலைவர் யார்... இன்று கூடுகிறதா அதிமுக எம் எல் ஏக்கள் கூட்டம்?