Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேசவும், எழுதவும் நான் கலைஞர் அல்ல... ஆனால் - ஸ்டாலின் நெகிழ்ச்சி!

Webdunia
சனி, 7 மே 2022 (11:04 IST)
திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2021 மே 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். 
 
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. ஓராண்டு நிறைவு கொண்டாட்டமாக, தலைமை செயலகம், சட்டப்பேரவை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டுள்ளன. கழகத்தினர் கொண்டாட்டத்தில் உள்ளனர். 
 
இந்நிலையில் திமுக ஆட்சி ஓராண்டு நிறைவு பெறுவதையொட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். துளி போன்ற ஓராண்டு காலத்தில் கடல்போல் சாதனைகளை செய்துள்ளோம் என பேசினார். தமிழக மக்களுக்காக கடந்த ஓராண்டில் உண்மையுடன் உழைத்தேன் என்ற நம்பிக்கையுடன் இந்த அவையில் பேசுகிறேன். நான் கலைஞர் அல்ல, அவரைப் போல பேச தெரியாது, எழுத தெரியாது, ஆனால் அவரைப் போல உழைக்க முயன்றேன் என தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பல்வேறு யூனியன் பிரதேசங்களில் இருந்து 500 பள்ளிகள் பங்கு கொண்ட மாபெரும் இறகு பந்து போட்டி

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: தமிழக அரசின் மீது ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

கேரளா கல்லூரியில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நாள் அனுசரிப்பு.. மாணவர்களிடையே கடும் மோதல்..!

ஜம்மு - காஷ்மீரில் மேக வெடிப்பு: 33 பேர் உயிரிழப்பு, 200-க்கும் மேற்பட்டோர் மாயம்

நாளை ஆளுனரின் தேநீர் விருந்து.. புறக்கணிக்க முதல்வர் ஸ்டாலின் முடிவு

அடுத்த கட்டுரையில்
Show comments