Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவு - கொண்டாட்டத்தில் கழகத்தினர்!!

Advertiesment
திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவு - கொண்டாட்டத்தில் கழகத்தினர்!!
, சனி, 7 மே 2022 (08:20 IST)
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது, திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. 

 
தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றது. பத்தாண்டுகளுக்குப் பின் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தது. 2021 மே 7 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக்கொண்டார். 
 
ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. திமுக கட்சியும் தனது ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்துள்ளது. எனவே இன்று சட்டச்சபையில் நன்றி தெரிவித்து பேசும் மு.க.ஸ்டாலின், சில புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார் என்று எதிர்பாக்கப்படுகிறது. 
 
ஓராண்டு நிறைவு கொண்டாட்டமாக, தலைமை செயலகம், சட்டப்பேரவை வளாகம், அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம் ஆகியவை அலங்கரிக்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின்  சட்டப்பேரவை செல்வதற்கு முன் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று அங்கு ஆசி பெற உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கையில் மீண்டும் அவசரநிலை பிரகடனம்!