கூடங்குளம் அணுமின் போராட்ட வழக்குகள் வாபஸ்? ஸ்டாலின் உறுதிமொழி கொடுத்ததால் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (06:49 IST)
அரசு ஊழியர்கள் போராட்டம் செய்த போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் ஆகியவை அடுத்து கூடங்குளம் போராட்டத்தின் போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் வாபஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
 
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு சில வாக்குறுதிகளை கொடுத்து கொண்டிருக்கிறார். ஆனால் அவர் வாக்குறுதி கொடுத்த ஒரு சில நாட்களில் முதல்வர் பழனிசாமி அதை நிறைவேற்றி வருகிறார். 
 
சமீபத்தில் அரசு ஊழியர்கள் போராட்டம் செய்த போது பதிவு செய்யப்பட்ட வழக்குகள், ஜல்லிக்கட்டு வழக்குகள், கூட்டுறவு கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை ஸ்டாலின் கொடுத்த நிலையில் அந்த வாக்குறுதிகளை அதிரடியாக முதல்வர் பழனிசாமி நிறைவேற்றி வருகிறார்.
 
இந்த நிலையில் தற்போது நெல்லையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்தபோது ’திமுக ஆட்சிக்கு வந்ததும் கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் வழக்குகள் வாபஸ் பெறப்படும்’ என உறுதி அளித்தார். இதனையடுத்து இந்த வழக்குகளை வாபஸ் பெறும் அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவுக்கு சாவு மணி அடிச்சாச்சி!.. மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆவேசம்!...

ஈரோடு பொதுக்கூட்டத்தில் செங்கோட்டையனுக்கு இன்சல்ட்?!.. ஆதரவாளர்கள் குமுறல்!...

வங்கதேசத்தில் மீண்டும் கலவரம்!.. நாடாளுமன்றத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்கள்!...

பேட்டியில் தொகுப்பாளருடன் கட்டிப்பிடி சண்டை போட்ட ராம்தேவ்!.. வீடியோவால் பரபரப்பு!...

SIR: 97 லட்சம் பெயர்கள் நீக்கம்!.. முதல்வர் ஸ்டாலின் நெக்ஸ்ட் மூவ் என்ன?...

அடுத்த கட்டுரையில்
Show comments