Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிட்டி பாபு இல்லைன்னா உயிரோட இருந்திருக்க மாட்டேன்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Webdunia
ஞாயிறு, 14 மே 2023 (09:44 IST)
நேற்று சென்னை கொளத்தூரில் மேயர் சிட்டிபாபு பாலத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் நடந்த சம்பவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் ரூ.61 கோடி செலவில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2019ல் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த திட்டம் தற்போது முழுவதுமாக முடிந்த நிலையில் பாலத்திற்கு மேயர் சிட்டிபாபு மேம்பாலம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாலத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் பேசிய அவர் “இரண்டு முறை கொளத்தூர் மக்கள் என்னை சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். கொளத்தூர் மக்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றி அளித்துள்ளேன். அந்த வகையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேயர் சிட்டிபாபு மேம்பாலம் இன்று திறக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறையும்.

இந்த மேம்பாலத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என கேட்டபோது மேயர் சிட்டிபாபு பெயர் வைக்க சொன்னேன். இன்று நான் உயிரோடு நின்று பேச அவர்தான் காரணம். மிசா காலக்கட்டத்தில் சிறையில் இருந்தபோது என் மேல் விழ இருந்த அடியை அவர் வாங்கவில்லை என்றால் நான் இல்லை. அதற்கான நன்றி உணர்வோடுதான் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை சந்தித்த இசைஞானி இளையராஜா.. சிம்பொனி குறித்து பேசியதாக பதிவு..!

வளர்ப்பு நாய்களுக்கு வாய்ப்பூட்டு! இல்லாவிட்டால் அபராதம்! - சென்னை மாநகராட்சி அதிரடி முடிவு!

தமிழக ஆலயங்களை விட்டு உடனடியாக அறநிலையத்துறை வெளியேற வேண்டும்! - பாஜக தலைவர் அண்ணாமலை!

கண்ணு தெரியலைன்னா கண்ணாடி போடுங்க! - கேள்வி கணைகளைத் தொடுத்த செல்லூராரை சுற்றி வளைத்த அமைச்சர்கள்!

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி காட்டுவோம்: ராகுல் காந்தி பதிவு

அடுத்த கட்டுரையில்
Show comments