Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமையல் காஸ் மானிய விவகாரம்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

Advertiesment
சமையல் காஸ் மானிய விவகாரம்: மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை
, சனி, 9 ஜூலை 2016 (07:57 IST)
சமையல் சிலிண்டர் மானியம் பெற ஆதார் கார்டு கட்டாயம் என்பதை மத்திய அரசு அனுமதிக்க கூடாது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

 
இது குறித்து, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், சமையல் காஸ் மானியம் பெற வரும் செப்டம்பர் மாதத்திற்குள் ஆதார் கார்டு விவரங்களை கொடுக்கா விட்டால் ரத்தாகும் என்று எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
 
ஏற்கனவே சமையல் காஸ் இணைப்பு வைத்துள்ளவர்கள் சந்தை விலையில் காஸ் சிலிண்டரை வாங்கி வருகிறார்கள். பிறகுதான் அவர்களுக்குரிய மானியத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
 
இந்த முறையிலும் திடீரென்று மாற்றம் செய்து, ஆதார் கார்டு கொடுத்தால்தான் மானியம் என்று வலியுறுத்துவதும், அப்படி ஆதார் கார்டு விவரங்களை தராத வாடிக்கையாளர்களுக்கு மானியத் தொகை நிறுத்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் தன்னிச்சையாக முடிவு எடுப்பது கடும் கண்டனத்திற்குரியது. இது ஏழை எளிய மக்களை பெரிதும் பாதிக்கும்.
 
பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்றாலும் சரி, சமையல் காஸ் சிலிண்டருக்கு கொடுக்கப்படும் மானியத்தை நிறுத்துவோம் என்பதாக இருந்தாலும் சரி, எண்ணெய் நிறுவனங்களின் இஷ்டத்திற்கு முடிவு எடுக்க மத்திய அரசு அனுமதிக்க கூடாது.
 
ஆதார் கார்டு விவகராத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்ற வேண்டும்.மேலும், அரசின் பயன்களைப் பெற ஆதார் கார்டு கட்டாயம் என்று யாரையும் வற்புறுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இப்படியொரு சூழலில் சமையல் காஸ் சிலிண்டர் மானியம் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பது போல ஆகும். மக்கள் நலனுக்கு விரோதமானது.
 
ஆதார் எண் கட்டாயம் என்று கோருவது  மானியம் பெறும் சமையல் காஸ் சிலிண்டர் பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் மத்திய அரசின் மறைமுகத் திட்டமாகும்.
 
எனவே, சமையல் காஸ் மானியம் பெற ஆதார் எண்  கட்டாயம் என்ற எண்ணெய் நிறுவனங்களை முடிவை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமுதிக நிர்வாகிக்கு கல்தா - விஜயகாந்த் அதிரடி