Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மு.க.ஸ்டாலின் சென்ற கார் விபத்து : பள்ளிகொண்டா அருகே பரபரப்பு

மு.க.ஸ்டாலின் சென்ற கார் விபத்து : பள்ளிகொண்டா அருகே பரபரப்பு

Webdunia
புதன், 2 நவம்பர் 2016 (10:40 IST)
திமுக பொருளாலரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்ற கார் நேற்று விபத்துக்குள்ளானது. ஆனால், அவர் உட்பட மற்ற அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.


 

 
தர்மபுரியில் நடைபெறவுள்ள, திமுக மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் என்பவரின் மகன் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையிலிருந்து புறப்பட்டுச் சென்றார். வேலூர் மாவட்டம், பள்ளி கொண்டா டோல்கேட் அருகே சென்ற போது, பின்னால் வந்த ஒரு கார், அவரின் காரை முந்தி செல்ல முயன்ற போது விபத்து ஏற்பட்டது. 
 
இதில், மு.க.ஸ்டாலின் வந்த காரின் முன்பகுயின் வலது புறத்தில் சேதம் ஏற்பட்டது. ஆனால், அவருக்கோ, அவருடன் பயணித்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. 
 
இதனையடுத்து, திமுக எம்.ல்.ஏ. காந்தி என்பவரின் காரில் ஏறி மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கிளம்பி தர்மபுரிக்கு சென்றார். இந்த விபத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி.டி.வி.தினகரனுடன் பேசினேன்; அவர் மறுபரிசீலனை செய்வார்.. அண்ணாமலை நம்பிக்கை..!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாவுக்கு தடை! அண்டை நாடு எடுத்த அதிரடி முடிவு..!

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அடுத்த கட்டுரையில்
Show comments