அன்னைத் தமிழில் அர்ச்சனை: 12 நூல்களை வெளியிட்டார் முதல்வர்
தமிழகத்தின் கோவில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று சமீபத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார் என்பது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இன்று குறித்து முதல் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது என்பது தெரிந்ததே
படிப்படியாக தஞ்சை பெரிய கோவில் உள்பட பல கோவில்களில் தற்போது அன்னை தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அன்னை தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை வெளியிட்டார்
பொது மக்களும் தாம் அறிந்த தமிழ் மொழிமூலம் அர்ச்சனை என மகிழ்வார்கள் என்றும் அவர் இந்த நூலை வெளியிடும் போது தெரிவித்தார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது