Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியுரிமை சட்ட திருத்தம்: களத்தில் இறங்கும் முக ஸ்டாலின்

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (08:23 IST)
மத்திய அரசு தாக்கல் செய்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தற்போது நாடு முழுவதும் போராடி வரும் எதிர்க்கட்சிகள், இந்த சட்டம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது எங்கே போயின என்று தெரியவில்லை
 
குடியுரிமை சீர்திருத்த சட்டம் மக்களவையில் வாக்கெடுப்புக்கு வந்தபோது 80எம்பிக்கள் மட்டுமே எதிராக வாக்களித்தனர். திமுக, காங்கிரஸ், மம்தா பானர்ஜி கட்சிகள் வாக்கெடுப்பில் கலந்து கொண்டார்களா என்பது தெரியவில்லை. மக்களவையில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தற்போது குடியுரிமை சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகே போராட்டத்தை எதிர்க்கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
 
ஏற்கனவே திமுக சார்பில் இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையிலும் தமிழகம் முழுவதும் உள்ள இளைஞரணி தொண்டர்களும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் மிகப்பெரிய போராட்டம் ஒன்றை அதில் உதயநிதி ஸ்டாலின் உள்பட பல திமுகவினர் கைது செய்யப்பட்டனர் என்பது தெரிந்தது
 
இந்த நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக முக ஸ்டாலின் அவர்கள் நேரடியாக களமிறங்கவுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றும் மற்ற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தவிருக்கும் இந்த போராட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளதால் இந்த போராட்டம் தீவிரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசும் போலீசாரும் தயார் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை உள்பட பல இடங்களில் கடல் சீற்றம்.. திருச்செந்தூரில் மட்டும் உள்வாங்கிய கடல்..!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.. சென்னை மாநகராட்சி ஆணையர் முக்கிய தகவல்..!

புயல் நகரும் வேகம் அதிகரிப்பு.. சென்னையில் மெட்ரோ ரயில்கள், பேருந்துகள் இயங்குமா?

மீண்டும் பார்க்கிங் களமாக மாறிய வேளச்சேரி மேம்பாலம்.. சென்னை மக்கள் மீண்டும் உஷார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments