தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது . இந்நிலையில் இன்று பருவமழை முன்னெச்சரிக்கை மேற்கொள்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் “வானிலை குறித்த செய்திகளை பொதுமக்கள், மீனவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும். அவசர கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் உரிய துறை அலுவலர்களோடு இயங்க வேண்டும். குடிசைப்பகுதிகள், கடலோர மீனவ குடியிருப்புகளை மண்டல கண்காணிப்பு அமைப்புகள் கண்காணிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.