Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மு.க.ஸ்டாலின் - ஓ.பி.எஸ் திடீர் சந்திப்பு!

மு.க.ஸ்டாலின் - ஓ.பி.எஸ் திடீர் சந்திப்பு!

மு.க.ஸ்டாலின் - ஓ.பி.எஸ் திடீர் சந்திப்பு!
, வெள்ளி, 14 அக்டோபர் 2016 (11:39 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில் அவரது துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது தமிழக அரசை ஓ.பன்னீர் செல்வம் இயக்குவதற்கான அனைத்து வாய்ப்புகளும் அவருக்கு உருவாக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார்.


 
 
இந்த சந்திப்பின் போது காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. விவசாயிகளுடனான கூட்ட தீர்மானம் அடங்கிய அறிக்கையை வழங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
காவிரியில் இருந்து இன்னமும் தண்ணீர் வராத நிலையில் தமிழக விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவும் இந்த சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுடன் எதிர்கட்சி துணை தலைவர் துரை முருகன், திமுக எம்.எல்.ஏ.க்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், ஜெ.அன்பழகன் ஆகியோரும் தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர்.
 
எதிர்கட்சி தலைவரின் இந்த திடீர் சந்திப்பு காவிரி விவகாரத்தி மீண்டும் தமிழக அரசு அதிக அழுத்தம் கொடுக்க வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்ய பெண்களை தேடும் சீன ஆண்கள்: காரணம் என்ன??