Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முதல்வராக ஸ்கெட்ச் போடுகிறாரா ஸ்டாலின்? பதட்டத்தில் அதிமுக

Advertiesment
Tamilnadu News
, திங்கள், 10 ஜூன் 2019 (13:04 IST)
அதிமுகவுக்குள் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து வரும் நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டசபை கூட்டத்தை கூட்ட சொல்லி கேட்டிருப்பது அதிமுக நிர்வாகிகளுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவிற்குள் சரியான தலைமை இல்லாததால் அடிக்கடி உறுப்பினர்கள் இடையே வாக்குவாதங்களும், புரட்டு பூசல்களும் ஏற்பட்டு வருகின்றன. ஸ்டாலினோ வலிமையில்லாத ஆட்சியை கலைத்துவிட்டு நிலையான ஆட்சியை கொண்டு வருவோம் என பல இடங்களில் பேசி வருகிறார். ஏற்கனவே ஆளுனரிடம் நிலையற்ற இந்த ஆட்சியை கலைக்க வேண்டுமெனெ மனு வேறு கொடுத்திருக்கிறார்.

இந்நிலையில் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல் வலுத்துள்ளது. வெளிப்படையாக தெரியுமளவிற்கு பல அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர். தற்போது இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஆட்சியை கலைத்துவிடலாம் என ஸ்டாலின் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அதற்காகதான் அவர் எந்த பிரச்சினையும் இல்லாத போதும் தண்ணீர் பிரச்சினையை காரணம் காட்டி சட்டசபையை கூட்ட சொல்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. சட்டசபை கூட்டும் முன்னர் அதிமுக தங்கள் நிர்வாகிகளுக்கான கூட்டத்தை ஏற்பாடு செய்து உட்கட்சி பூசல்களுக்கு ஒரு முடிவு கண்டுவிட முன்முயற்சியாய் இருப்பதும் அதனால்தான் என கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் பிரதமரை சந்திக்கும் மூன்று ஆளுனர்கள்: பரபரப்பு தகவல்