Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக முதல்வரை நம்பி பிரயோஜனமில்லை: பிற மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதிய முக ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2020 (13:26 IST)
இந்த கொரோனா வைரஸ் காலத்தில் நீட் தேர்வுகளை நடத்த வேண்டாம் என்று கிட்டத்தட்ட பாஜக ஆட்சி செய்யாத அனைத்து மாநில முதல்வர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது குறித்து 7 மாநில முதல்வர்கள் சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
நீட் தேர்வுகளை நடத்தி மாணவர்களை வாழ்க்கையில் விளையாட வேண்டாம் என திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே மத்திய மாநில அரசுக்கு அறிவுறுத்தி இருந்தார். நீட் தேர்வை நடத்த வேண்டாம் என மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என அதிமுக அரசுக்கும் அவர் வலியுறுத்தியிருந்தார் 
 
இந்த நிலையில் நீட் தேர்வை நடத்த வேண்டாம் என்று அதிமுக அரசு கூறி வந்தாலும் அதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக அரசை இனிமேல் நம்பி பிரயோஜனம் இல்லை என்று மற்ற மாநில முதல்வர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
 
நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்க கோரி உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்று ஆந்திரா தெலுங்கானா கேரளா ஒரிசா ஆகிய மாநில முதல்வர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா நிலைமை மேலும் மோசம் அடைந்துள்ள நிலையில் நீட் தேர்வு நடத்துவதற்கு அனைத்து மாநில முதல்வர்களும் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
ஏற்கனவே 7 மாநில முதல்வர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ள அதை அடுத்து மற்ற மாநில முதல்வர்களும் முக ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு எதிராக தங்களது குரலை உயர்த்துவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாத்மா காந்தி பாகிஸ்தானுக்கு தான் தேசத் தந்தை: பிரபல பாடகர் சர்ச்சை கருத்து..!

ஷேக் ஹசீனாவை எங்களிடம் ஒப்படையுங்கள்: இந்தியாவுக்கு கடிதம் எழுதிய வங்கதேச அரசு..!

மருத்துவ கழிவு கொட்டிய விவகாரம்: மாநில அரசை விளாசிய கேரள உயர்நீதிமன்றம்..!

BSNL நிறுவனத்திற்கு நிலுவைத்தொகை இல்லையா? அமைச்சரின் கருத்துக்கு அண்ணாமலை பதிலடி

தமிழகத்தில் டிசம்பர் இறுதி வரை மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments